×

சேது பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தேர்வு

மதுரை, ஏப். 16: மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரி நிர்வாகம் சார்பாக 12ம் வகுப்பு முடித்த கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களைப் படித்த மாணவ மாணவிகளுக்கு வரும் ஏப்.29்ம் தேதியன்று கல்லூரி வளாகத்தில் சேது ஊக்கத்தொகை தேர்வு நடைபெற உள்ளது. இதில் 100 மதிப்பெண்ணுக்கு மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் மூலம் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. கடந்தாண்டு இந்த தேர்வின் மூலம் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெற்றனர்.

மாணவர்கள் சேது கல்லூரி இணையதளம் மூலமாக அல்லது கொடுக்கப்பட்ட லிங்கில் https://sethumerittest.in/registration பதிவு செய்து கொள்ளலாம். மாணவர்கள், பெற்றோர்களுக்கு பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது. சந்தேகங்களுக்கு கணிதத்துறை தலைவர் முனைவர் லட்சுமணராஜை, 99449-62060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கல்லூரி முதல்வர் செந்தில்குமார் தலைமையில் கணினித்துறை டீன் சிவரஞ்சனி, கணிதத்துறை தலைவர் லட்சுமண ராஜ் மற்றும் கல்லூரி தேர்வாணைய தலைவர் பேராசிரியர் முரளி கண்ணன் தேர்வு ஏற்பாடுகளை செய்கின்றனர்.

The post சேது பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தேர்வு appeared first on Dinakaran.

Tags : Sethu Engineering College ,Madurai ,Setu Engineering College ,Dinakaran ,
× RELATED சேது பொறியியல் கல்லூரியில் ஊக்கத்...